எங்களைப்பற்றி

இஸ்லாமிக் அகாடமி (அஞ்சல் வழி நூலகம்) – ஓர் அறிமுகம்

இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள் மக்களிடையே பரவலாகக் காணப்படும் நிலையில், இஸ்லாம் குறித்து தெளிவான விளக்கங்களை அளிக்க வேண்டியது மிக முக்கியமான பணியாகும்.
இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் 1987 ஆம் ஆண்டில் இஸ்லாமிக் அகாடமி – அஞ்சல் நூலகம் நிறுவப்பட்டது.
இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ள விரும்பிய சகோதரர்களுக்காக, இஸ்லாம் குறித்து மிகத் தெளிவான விளக்கங்களை அளிக்க வேண்டியதற்காக அமைக்கப்பட்ட இளையதளம் தான் நெஞ்சோடு.காம்
அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாம் குறித்து வாசகர்களின் ஐயங்களுக்குத் தெளிவான விளக்கத்தை முறையாக வழங்கி வருகிறோம்.
இஸ்லாமிக் அகாடமி அஞ்சல் வழி நூலகம் போன்று எவ்வித இலாப நோக்கமும் இன்றி செயல்படுகிறது.
இஸ்லாத்தை அறிந்து கொள்ள விரும்பும் எவர் வேண்டுமானாலும் இதில் உறுப்பினராகச் சேரலாம்.
உங்கள் விருப்பத்தை ஓர் அஞ்சல் அட்டை மூலம் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
வாசகர்களுக்கு அஞ்சல் வழி மூலம் பாடத்திட்ட வரிசைப்படி இலவசமாக நூல்களை அனுப்புகிறோம்.
வாசகர்கள் Read and Post முறைப்படி பாட நூல்களைப் படித்து முடித்துவிட்டு எங்களுக்கு நூல்களைத் திருப்பி அனுப்ப வேண்டும்.
www.Nenjodu.com
இப்போது எல்லோரும் கணினி மையமாகம் போது , நாமும் இஸ்லாம் குறித்து தெளிவான விளக்கங்களை வழங்க ஒரு இனைய தளம் நெஞ்சோடு காம் என்ற பெயரில் அமைத்தோம்.
இதில் பிற சமய மக்கள் தெரிந்துக்கொள்ளும் அளவிற்கு இஸ்லாம் குறித்து அணைத்து விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
இன்னும் கேள்வி பதில் என்று ஒரு தனி பிரிவு அமைக்கப்பட்டது. வாசகர்களுடைய கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில்கள் தர முயற்சி மேற்கொண்டு இருக்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

இஸ்லாமிக் அகாடமி
138, பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை – 600 012
தொலைப்பேசி: 26621101
மின்னஞ்சல்: postallibrary@gmail.com

Add Comment