முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளா?

Category: Articles 12 0

பெரம்பூரிலிருந்து பாரிமுனை நோக்கிப் பேருந்து புறப்பட்டது.

namaz

எனக்குப் பக்கத்தில் ஒரு பெரியவர். அவருடைய மடியில் ஆறு அல்லது ஏழு வயதில் அவருடைய பேத்தி.

பேருந்து வேப்பேரியை நெருங்கிய போது ஓர் அழகான தேவாலயம் தெரிந்தது. குழந்தை ஆவலுடன் தாத்தாவிடம் கேட்டது.

“தாத்தா… அது என்ன?”

“அதுதாம்மா சர்ச். கிறிஸ்தவர்கள் அங்கதான் சாமி கும் பிடுவாங்க. அவங்க கடவுள் ஜீஸஸ் அங்கதான் இருக்கார்.”

சில வினாடிகளில் நாராயண குரு கோயில் வந்தது. ஸ்ரீநாராயண குருவே உயிரோடு வந்து அமர்ந்திருப்பது போன்ற சிலையும் மண்டபமும் எல்லாரையும் கவர்ந்தது.

பேத்தி ஆர்வத்துடன் தாத்தாவைக் கேட்டாள்@

“தாத்தா…. இவரு யாரு?”

“இவரு பெரிய மகான். கடவுள் மாதிரி! இந்துக்கள் இவரைக் கடவுளின் அவதாரமாகவே கருதிக் கும்பிடறாங்க!”

குழந்தை ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள்.

கால்நடை மருத்துவக் கல்லூரி தாண்டி சாலையின் திருப் பத்துக்குப் பேருந்து வந்தபோது பெரியமேடு பள்ளிவாசல் கம்பீரமாகத் தெரிந்தது.

“தாத்தா… தாத்தா… இது என்ன? ரொம்ப அழகா இருக் குதே!”

“இதுதாம்மா பள்ளிவாசல். முஸ்லிம்கள் இங்கதான் தொழுவாங்க. அவங்களோட கடவுள் பேரு அல்லாஹ்!”

பெரியவர் இப்படிச் சொல்லி முடித்ததும் அந்தச் சிறுமி சட்டெனக் கேட்டாள் @

“தாத்தா… இப்படி ஆளுக்கு ஒரு சாமி இருப்பதைவிட எல்லாருக்கும் ஒரே கடவுள் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!”

பெரியவர் திகைத்துப் போய்விட்டார்.

நான் சிரித்தபடியே அந்தக் குழந்தைக்கு ‘சபாஷ்’ சொன் னேன். பிறகு பெரியவரைப் பார்த்து, “ஐயா. உங்க பேத்தி ரொம்ப புத்திசாலியான பொண்ணு. அவள் கேட்டது மிகவும் நியாயமான கேள்வி. நீங்க அதுக்கு விடை சொல்லவே இல்லையே!”

“அவ ஏதாவது இப்படித் துடுக்குத்தனமா கேட்டுக் கிட்டுத்தான் இருப்பா.”

“இல்லீங்க ஐயா! உங்க பேத்தியின் கேள்வி துடுக்குத் தனமானது அல்ல. மனித இயற்கையின் – மனித உணர்வின் இயல்பான தேடல் அது!”

பெரியவர் நிமிர்ந்து பார்த்தார்.

“ஆமாம் ஐயா…! இறைவன் ஒருவனே எனும் கொள்கை தான் இயற்கையானது; உண்மையானது; எல்லா மதங்களும் வலியுறுத்துவது. இந்த அடிப்படை உண்மையை நாம் மறந்து விட்டு மத ரீதியான சடங்கு – சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். ஆயினும் நம்முடைய உள்மனம் அந்த ஏகப் பரம்பொருளை – வல்ல இறைவனைத் தேடிக்கொண்டே இருக்கிறது…!”

“உண்மைதான் தம்பி…! இந்தத் தேடல் மனித இயல் பிலேயே கலந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்!”

“ஐயா, இன்னொரு செய்தி!”

“என்ன தம்பி?”

“முஸ்லிம்களின் கடவுள் அல்லாஹ் என்று உங்க பேத் திக்கு விளக்கம் சொன்னீங்க. அதுல ஒரு சின்ன திருத்தம்.”

“என்ன அது?”

“அல்லாஹ் முஸ்லிம்களின் கடவுள் மட்டுமல்ல!”

“அப்படியா?”

“ஆம் ஐயா… ஆங்கிலத்தில் எOஈ, ஹிந்தியில் பகவான், தமி ழில் இறைவன் என்று சொல்வது போல் அரபியில் ‘அல்லாஹ்’ என்கிறார்கள். அல்லாஹ் என்றால் சர்வ வல்லமை பொருந் திய – இணை துணையற்ற ஏக இறைவன் என்று பொருள். அந்த இறைவன் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல. எல்லாருக்கும் அவன்தான் இறைவன்!”

“நான் இதுநாள் வரை அல்லாஹ் என்றால் ஏதோ தனிக் கடவுள் என்றுதான் நினைத்திருந்தேன்.!”

“அப்படி இல்லை ஐயா. மனித இனத்தின் ஒவ்வொரு பிரிவையும் தனித்தனிக் கடவுள்கள் படைத்திருக்க முடியாது. வானம், பூமி உட்பட இந்தப் பேரண்டம் முழுவதையும் எந்த இறைவன் படைத்தானோ அதே இறைவன்தான் மனித இனத்தையும் படைத்திருக்கின்றான். அந்த ஏகப் பரம் பொருளுக்கு அடிபணிந்து வாழ்வதே மனிதனின் கடமை.”

பெரியவர் தலையாட்டினார்.

பாரிமுனை வந்தது. பெரியவரிடமும் குழந்தையிடமும் விடைபெற்றேன். அப்பொழுது அந்தச் சுட்டிப் பெண் கூறினாள் :

“அண்ணா…! நீங்க சொன்னதுதான் சரி! நம் எல்லாருக்கும் கடவுள் ஒருவன்தான்” என்றாள்.

தேடல் நிறைந்த ஓர் இளைய தலைமுறை என் மனக் கண்ணில் தெரிய புதிய நம்பிக்கையுடன் நடந்தேன்.

Related Articles

Add Comment