மரணத்திற்குப் பின் வாழ்க்கை

Category: Video 52 0

மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை என்றால்:
1.நன்மைகள் தீமைகள் அர்த்தமற்றவையாகிவிடும்.
2.மனிதனுக்கு நீதி கிடைக்கும் வாய்ப்பேயில்லை என்றாகி விடும்
3.மேதைகளின் முடிவுகள்கூட ஈ, எறும்புகளின் முடிவு போல் ஆகி விடும்.
4.இறைவன் யார்?, அவனைப் பார்க்க முடியுமா?, வாழ்வு எதற்கு? மரணம் என்றால் என்ன? மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை என்ன?
5.மறுமை வாழ்க்கை இல்லை என்றால் இதனை போன்ற மனிதனை வாட்டிஎடுக்கின்ற கேள்விகளோடு அவனும் ஈ, எறும்பு போல் மண்ணோடு மண்ணாகிவிட வேண்டியதுதான் .

இந்தப் பிரபஞ்சமே அர்த்தமற்ற செயலாகி விடும்.

இறைவன் எப்படி ஓர் அர்த்தமற்ற செயலைச் செய்வான். ஆக, எல்லாச் செயல்களுக்கும் உரிய கூலியை வழங்கக்கூடிய இறுதித் தீர்ப்பு நாள் ஒன்று இருந்தே ஆக வேண்டும். . மரணத்திற்குப் பின் இன்னொரு முடிவற்ற வாழ்க்கை ஒன்று இருந்தே ஆக வேண்டும்.

உண்மையில் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்குமென யாரும் சொல்லமுடியாது ஏன் என்றால் எந்த மனிதரும் மரணித்த பிறகு திரும்பியதில்லை.
ஆக, மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்று இறைவன் ஒருவனால்தான் சொல்ல முடியும்.

Related Articles

Add Comment