நெருப்பினால் தண்டிக்காதீர்கள்!

Category: Articles 28 0

மனித நேயம் குடிகொண்டுள்ள இதயங்கள் எல்லாம் ஒரு நிமிடம் துடிக்க மறந்து திகைத்துப் போய்விட்டன…!

கொடூரமான கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வும், அதைத் தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற கொடுமைகளும்… அப்பப்பா…!

குப்பை – கூளங்களை எரிப்பது போல் மனித உயிர்களை எரித்திருக்கிறார்கள். குழந்தைகள் மீதும் நெருப்புக் குளியல்…!

Large_bonfire

சட்டத்தைக் கையில் எடுக்கும் உரிமை எப்படி யாருக்கும் இல்லையோ, அப்படியே நெருப்பைக் கையில் எடுக்கும் உரிமையும் யாருக்கும் இல்லை.

கலவரங்களின் போது மட்டுமல்ல, குடும்பச் சண்டை, சொத்துத் தகராறு. வரதட்சணைப் பிரச்னை போன்ற தனிப் பட்ட நிகழ்வுகளின் போது கூட கொளுத்தும் கொடூரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நெருப்பைக் கொண்டு தண்டிக்கும் உரிமையை இவர் களுக்கு யார் தந்தது?

மனித உயிர்களை மட்டுமல்ல, இதர எளிய உயிரினங் களைக்கூட நெருப்பினால் தண்டிக்கக்கூடாது என்பது இஸ் லாமியச் சட்டம்.

நபிகள்நாயகம் (ஸல்) தம் தோழர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

வழியில் ஓரிடத்தில் தங்கியிருந்த போது அண்ணலார் தமது தேவைகளை நிறைவேற்றச் சென்றுவிட்டார்கள்.

நபித்தோழர்கள் அமர்ந்திருந்த இடத்தில் எறும்புப் புற்றுகள் நிறைய இருந்தன. ஏராளமான எறும்புகள் அங்கு மிங்கும் ஓடிக் கொண்டிருந்தன…!

என்ன நினைத்தார்களோ, தெரியவில்லை, நபித்தோழர் களில் சிலர் அந்த எறும்புப் புற்றுகளை எரித்துவிட்டார்கள். சின்னஞ்சிறு உயிர்கள் கருகி மடிந்தன…!

திரும்பி வந்த நபிகள் நாயகம் அவர்கள் எரிக்கப்பட்டிருந்த எறும்புப் புற்றுகளைப் பார்த்து வேதனையும் கவலையும் அடைந்தவராய் “இந்த எறும்புப் புற்றுகளை எரித்தவர்கள் யார்?” என்று கேட்டார்.

“நாங்கள்தாம் எரித்தோம்” என்று நபித்தோழர்கள் கூறி னார்கள்.

“நெருப்பினால் யாரையும் – எந்த உயிரையும் தண்டிக்காதீர் கள். நெருப்பினால் வேதனையளிக்கும் தண்டனையைத் தருவது அதிபதியான இறைவனின் உரிமையாகும். (மனிதர் களுக்கு அந்த உரிமை இல்லை)” (ஆதார நூல் @ அபூதாவூத்)

“நெருப்பினால் கொலை செய்யாதீர்கள். நெருப்பால் தண்டிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியதாகும்.”

(புகாரி)

நெருப்பின் மூலம் எறும்புகளைக் கூடத் தண்டிக்கக் கூடாது எனும் போது படைப்புகளிலேயே மிகச் சிறந்த – உயர்ந்த படைப்பான மனித உயிர்களைத் தீயால் எரிப்பது என்ன நியாயம்?

இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பு உண்மையானால், பிறர்க்குத் தீங்கு இழைக்கும் நோக் கத்துடன் தீக்குச்சியைத் தீண்டுவதற்குக் கூட நமக்கு உரிமை இல்லை.

வெறுப்பும் வேண்டாம்; நெருப்பும் வேண்டாம்.

இப்பொழுது நமக்குத் தேவை அன்பு. மதமாச்சர்யங் களைக் கடந்து நம் உள்ளங்களில் ஆன்மிக அன்பு வெள்ளம் பெருகட்டும்…!

வெறுப்பு எனும் நெருப்பை அந்த அன்பு வெள்ளம் அடித்துச் செல்லட்டும்.

Related Articles

Add Comment