தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!

Category: Articles 43 0

மனநல மருத்துவர்களிடம் வரும் நோயாளிகளின் முதல் முறையீடு இதுதான்; “டாக்டர்…! நைட்ல தூக்கமே இல்லை டாக்டர், என்னென்னவோ சிந்தனைகள்; மூளையே குழம்புது!”

அதே போல் மருத்துவர்கள் நோயாளிகளிடம் கேட்கும் முதல் கேள்வியும் தூக்கம் பற்றியதாகத்தான் இருக்கும்.

baby_2

நம்நாட்டில் ‘வணக்கம்’‘குட்மார்னிங்‘ சொல்வது போல ஜெர்மனியில் காலையில் எழுந்ததும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது ‘நேற்று இரவு நிம்மதியாக உறங்கினீர்களா?’ என்று கேட்பார்களாம்.

ஏனெனில் உடல்நலமும் மனநலமும் சரியாக இருக் கின்றனவா என்பதைக் கண்டறியும் அளவுகோல் தூக்கம்தான்.

வல்ல இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள மகத்தான அருட்கொடைகளில் ஒன்று தூக்கம். இறை வல்லமைக்கு ஓர் இனிய சான்றாகவும் தூக்கத்தைக் குர்ஆன் குறிப்பிடுகிறது.

“…உங்கள் உறக்கத்தை அமைதி அளிக்கக்கூடியதாய் நாம் ஆக்கவில்லையா?” (குர்ஆன் 78@9)

இந்த வசனத்தின் முன்பின் தொடர்களில் பூமியை விரிப் பாக்கி வைத்ததையும், அதில் மலைகளை ஆணிகள் போன்று நிலைபெறச் செய்ததையும், இரவு – பகலின் மாற்றங்களையும் பற்றிக் குறிப்பிடும் இறைவன், அவற்றையெல்லாம் தன் படைப்பாற்றலுக்குச் சான்றுகளாய்த் தருகின்றான். இந்தச் சான்றுப் பட்டியலில், உறக்கத்தை அமைதி அளிக்கக்

கூடியதாய் ஆக்கியதையும் சேர்த்துள்ளான்.

இதிலிருந்து அமைதியான உறக்கத்துக்கு குர்ஆன் தரும் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.‘தூக்கம்’ எனும் அருட் கொடை மட்டும் மனிதனுக்கு வழங்கப் படாமல் இருந் திருந்தால் உலகம் என்ன ஆகியிருக்கும்? மனிதர்கள் நிம்மதி இழந்து, மனச் சிதைவுக்கும், மன இறுக்கத்துக்கும் ஆளாகி, பைத்தியங்களாய் சுற்றிக் கொண்டு இருந்திருப்பார்கள், ‘பைத் தியக்கார உலகம்’ என்பது உண்மையாகி இருக்கும்.

ஆனால், தான் படைத்த மனித இனத்தின் மீது பேரன்பும் பெருங் கருணையும் கொண்ட இறைவன் அவர்களுக்குத் தூக் கத்தின் மூலம் நிம்மதி அருளினான்; நன்றாகத் தூங்கி எழுந்த பிறகு புத்துணர்வையும் உற்சாகத்தையும் வழங்கினான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ‘உஹது’ எனும் இடத்தில் இறைநம்பிக்கையாளர்களுக்கும், நிராகரிப் பாளர்களுக்கும் இடையில் போர் மூண்டது. தொடக்கத்தில் நிராகரிப்பாளர்களின் கையே ஓங்கியிருந்தது. நம்பிக்கை யாளர்கள் பலத்த இழப்புக்கும் சரிவுக்கும் ஆளானார்கள்.

இதன் காரணமாக நபித்தோழர்கள் பலருடைய உள்ளங் களைத் துன்பம் கவ்வியது. வெற்றி கேள்விக்குறி ஆகி விடுமோ என்று பரிதவித்தார்கள். ஒருவிதமான பதற்றத்துக் குப் பலியானார்கள். அப்பொழுது இறைவன் அவர்கள் மீது கருணை புரிந்தான். அந்தத் துன்பத்தையும் பதற்றத்தையும் போக்கும் வகையில் அவர்களைக் கொஞ்சம் உறங்க வைத் தான். இதோ, குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.

“…இந்தத் துன்பத்திற்குப் பிறகு மன ஆறுதலை அளிக் கக்கூடிய சிற்றுறக்கத்தை இறைவன் உங்களுக்கு அருளினான். உங்களில் ஒரு குழுவினரை அது ஆட்கொண்டது!”

(குர்ஆன் 3@ 154)

இந்த வியப்பான அனுபவத்தைப் போரில் கலந்து கொண்ட அபூதல்ஹா எனும் நபித்தோழர் விவரிக்கும்போது, “அப்போது எங்கள் வாள் எங்கள் கைகளை விட்டுத் தானாக நழுவிவிடும் அளவுக்கு எங்களை உறக்கம் ஆட்கொண்டு விட்டது” என்கிறார்.

மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய இடம்தான் போர்க்களம். ஆயினும் எந்த நெருக்கடியின் போதும் பதற்றப்படாமல் நிதானத்துடனும் தெளிவாகவும் செயல்பட வேண்டியது போர்வீரனின் கடமை. அப்பொழுதுதான் வெற்றி காண முடியும். இறை நம்பிக்கையாளர்கள் பதற்றத் துக்கும் துன்பத்துக்கும் ஆளான போது இறைவன் அவர்களைச் சற்றே கண்ணயர வைத்தான். அதற்குப் பிறகு அவர்களின் மனம் அமைதி அடைந்தது. புத்துணர்வுடன் போர்க்களம் புகுந்து, எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தனர்; வெற்றி வாகை சூடினர்.

போர் வீரனுக்கும் கூட தூக்கம் அவசியம் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.

மனப் பதற்றத்தை நீக்கி அமைதியை மலரச் செய்யும் அருமருந்து தூக்கம் தான்!

தூக்கம் உடல் நலத்துக்கு நல்லது என்று எப்பொழுது பார்த் தாலும் தூங்கிக் கொண்டே இருப்பதும் சரியல்ல. அது சோம் பேறித்தனத்திற்கும் பின்னடைவுக்கும் வழி வகுத்துவிடும்.

“சோம்பலில் இருந்தும், கடன் தொல்லையில் இருந்தும் பாதுகாக்கும்படி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டே இருங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அறிவுறுத்தி யுள்ளார்.

ஆகவே, அளவோடு உறங்கி, நலமோடு உழைத்து, வளமோடு வாழ்வோமாக!

Related Articles

Add Comment