ஒரே இறைவனை நம்புதல் என்றால் என்ன?

Category: Articles 97 0

இதழ் தயாரிப்புப் பணிகளில் மும்முரமாக மூழ்கி யிருந்தேன்.

“தம்பி… வரலாமா?”- குரல் கேட்டு தலை நிமிர்ந்தேன்.

நெற்றி நிறைய திருநீறும் வாய் நிறைய புன்னகையுமாய் பெரியவர் ஒருவர் நின்றிருந்தார்.

“வாருங்கள் ஐயா…! உட்காருங்கள்!”

அறைக்குள் வந்து அமர்ந்தார்.

“சமரசம் பத்திரிகையை நான் விரும்பிப் படிப்பதுண்டு. குறிப்பாக நீங்க எழுதும் ‘நெஞ்சோடு…’பகுதியைத் தவற விடுவதே இல்லை…” என்றார்.

“ரொம்ப நன்றிங்க ஐயா!”

“இறைவன் ஒருவன்தான்; அவனை மட்டுமே வணங்க வேண்டும் என அடிக்கடி எழுதுறீங்க…! என்னுடைய கொள்கையும் அதுதான் தம்பி!”

one

“சிந்திக்கத் தெரிந்தவர்கள் அனைவருமே அந்த முடிவுக் குத்தான் வருவார்கள்…!”

“ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம்!”

“எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்!”

“இந்து மதமும் பரம்பொருள் ஒன்றுதான் என்றே கூறு கிறது. இஸ்லாமும் இறைவன் ஒருவனே என்கிறது. அப்படி யானால் இரண்டுக்கும் இடையில் என்ன வேறுபாடு? அந்தப் பரம்பொருளை நம்பும் என்னைப் போன்றவர்களை இஸ்லாம் ‘இணைவைப்பாளர்கள்’ என்று ஏன் குறிப்பிடுகிறது?”

“அருமையான கேள்வி. இதற்கு விளக்கம் தரும் வகையில் நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா?”

“கேளுங்கள் தம்பி!”

“பரம்பொருள் ஒன்றுதான் என நீங்கள் சொன்னாலும் வழிபாடுகளின் போது ஏதேனும் திருவுருவச் சிலையை முன்வைத்துதானே நீங்கள் பூஜைகள் செய்கிறீர்கள்?”

“ஆமாம்!”

“இதுதான் முதல் வேறுபாடு. இஸ்லாம் கூறும் ஏக இறை வன் காட்சிக்கும் வடிவத்துக்கும் அப்பாற்பட்டவன். குறிப் பிட்ட இடம், பொருள், உருவம், எல்லைகளுக்குள் அவனைக் கட்டுப்படுத்த முடியாது. அடுத்து, நீங்கள் ஒரே பரம் பொருளை நம்புகிறீர்கள். ஆனால் அந்தப் பரம்பொருள்தான் பரிபாலிப்பவன், படைப்பவன், இயக்குபவன், அழிப்பவன் என்று நம்புகிறீர்களா? அதாவது, ஆக்கல், காத்தல், அழித்தல் இந்த மூன்றும் அந்தப் பரம்பொருளிடமே இருப்பதாக கருதுகிறீர்களா?”

“இல்லை…! நாங்கள் அந்த மூன்றுக்கும் மூன்று தெய் வங்களை அல்லவா நம்புகிறோம்!”

“இது இரண்டாவது வேறுபாடு. உண்மையில் இந்த மூன்று ஆற்றல்களுக்கும் சொந்தக்காரன் ஏக இறைவன் மட்டுமே என இஸ்லாம் கூறுகிறது. சரி, வானங்கள், பூமியின் ஆட்சியதிகாரம் யாருக்கு உரியது எனக் கருதுகிறீர்கள்? சட்டமியற்றும் உரிமை யாருக்கு உண்டு எனச் சொல்ல முடியுமா?”

“எங்கள் சாமிகளில் எதுவும் சட்டம் இயற்றியிருப்பதாகத் தெரியவில்லையே!”

“இது மூன்றாவது வேறுபாடு. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் ஏக இறைவனுக்கு மட்டுமே உரியது. சட்டம் இயற்றும் உரிமையும் (ஃச்தீ எடிதிஞுணூ) அவனுக்கே சொந்தம் என இஸ்லாம் கூறுகிறது. அடுத்து, இன்னின்ன செயல்கள் அனு மதிக்கப்பட்டவை (ஹலால்); இன்னின்ன செயல்கள் தடுக் கப்பட்டவை (ஹராம்) என நிர்ணயிக்கும் அதிகாரம் யாருக்கு உரியது?”

“இந்த ஹலால் – ஹராம் கருத்தோட்டமே எங்களிடம் இல்லையே தம்பி!”

“இது நான்காவது வேறுபாடு. எந்த ஒரு செயலையும் குறித்து ஆணையிடுவதற்கோ, தடுப்பதற்கோ இறைவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை கிடையாது. ஒருவர் தடுப்ப தனால் எதுவும் ஹராம் ஆகிவிடுவதில்லை; ஒருவர் அனுமதிப் பதினால் எதுவும் ஹலால் ஆகிவிடுவதில்லை. இது ஹலால்- இது ஹராம் என்று சொல்லும் உரிமை படைப்பினங்களில் யாருக்கும் இல்லை. படைத்தவனுக்கு மட்டுமே உண்டு.”

“ஆக, பரம்பொருள் ஒன்று என வெறுமனே நம்பினால் போதாது…! இப்படி எல்லாவகையிலும் இறைவனுடைய தகுதிகளையும் உரிமைகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும், அப்படித்தானே?”

“சரியாகச் சொன்னீர்கள்…! மேலே சொன்ன அனைத்தும் கருணையுள்ள இறைவனுக்கு மட்டுமே உரியன என நம்ப வேண்டும். அவ்வாறு நம்பி, அவனையே இறைவனாக, ஆட்சியாளனாக, அதிபதியாக ஏற்று, அவனுடைய சட்டங் களுக்கு மட்டுமே அடிபணிந்து வாழ வேண்டும். அப்படிச் செய்பவர்கள்தாம் மூமின்கள் – உண்மையான ஓரிறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இவற்றில் ஏதேனும் ஒரு தகுதியோ அல்லது எல்லா தகுதிகளுமோ மற்றவர்களுக்கும் உண்டு என நம்புபவர்களை ‘இணைவைப்பவர்கள்’ என்று இஸ்லாம் கூறுகிறது. இந்த இணைவைப்பிலிருந்து விடுபட்டு, ஏக இறைவனின் பக்கம் வாருங்களென இஸ்லாம் அழைக்கிறது!”

“அருமையான விளக்கம்…! நீங்க சொன்னபடி அந்த ஏக இறைவனை மட்டுமே வழிபடும் நற்பேறு எனக்கும் கிட்டுமா…?”- கண்களில் நீர் தளும்ப, நா தழுதழுக்க அவர் கேட்டார்..!

நான் “இன்ஷா அல்லாஹ்…” என்றேன்.

Related Articles

Add Comment