எங்கே அமைதி..?

Category: Articles 12 0

மனிதன் மிகவும் விரும்புவது அமைதியே. ஆனால் மனிதனிடமிருந்து வேகமாக நழுவிப் போவதும் அமைதியே.

நம்மில் பலருக்கு அமைதி ஒரு கானல் நீரணிகவே அமைந்து விடுகிறது.
‘இந்தப் பிரச்னையை சமாளித்து விட்டால் எனக்கு அமைதி கிடைக்கும்’ என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே புதிய பிரச்னை ஒன்று முளைத்து அவனை மிரட்டுகிறது.

தனிமனிதனைப் போலவே சமூகங்களும் அலைஅலையாகப் பிரச்னைகளை எதிர்கொள்கின்றன.

அமைதியைக் குலைக்கும் முயற்சிகளும் அமைதியைத் தேடும் முயற்சிகளும் மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை நடைபெற்று வருகின்றன.
அமைதிக்கான வழிகளை அறிஞர்களும் சித்தாந்தவாதிகளும் ஆன்மிகவாதிகளும் காட்டியுள்ளனர்.
ஆனால் ஒவ்வொரு சிந்தனைப் பிரிவினரும் ஒரு குறிப்பிட்ட துறையோடு தமது ஆய்வுகளை நிறுத்திக் கொண்டனர்.
சாதி, இன மோதல்களே அமைதியைக் குலைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன;
எனவே அவற்றை அகற்றினால் மட்டுமே அமைதி கிட்டும் என்று கூறி வருகின்றனர் சிலர்.
வர்க்கப் போராட்டமே அமைதி குலைவுக்குக் காரணம் என்கின்றனர் இன்னும் சிலர்.
பிரார்த்தனை, வழிபாடு, தியானம் மூலம் அமைதி அடையலாம் என்கின்றனர் வேறு சிலர்.

ஆனால் அமைதி குலைவதற்கான காரணங்கள் ஏராளம். ஆகவே தீர்வுகளும் விரிவானவை.

இஸ்லாம் எனும் பெயருக்கு அமைதி என்று பொருள். எனவே அமைதியைப் பற்றி இஸ்லாம் விரிவாகப் பேசுகிறது.

தனிமனிதனில் தொடங்கி, சமூகம், பொருளாதாரம், அரசியல் என மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமைதியை நிலைநாட்டுவது பற்றி இஸ்லாம் விளக்குகிறது.

இவை வெறும் தத்துவங்கள் (Utopian) அல்ல. மாறாக, ஏற்கெனவே செயல்படுத்திக் காட்டப்பட்ட கொள்கைகள்; இன்றும் செயல் படுத்தப்பட்டுவரும் கொள்கைகள்.

Related Articles

Add Comment