‘இறைவா’ எனக்கு ஒரு குழந்தையை தா!’

Category: Articles 71 0

babyவீடு என்றால் குழந்தைகள் இருக்க வேண்டும். குழந் தைகள் இல்லாத வீட்டில் மகிழ்ச்சியோ, கலகலப்போ இருக்காது.

குழந்தைப் பேற்றை யாரும் வெறுப்பதில்லை. மணிமணி யாக ஒன்றிரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண் டும் என்று விரும்பாத பெற்றோர்களே இருக்கமாட்டார்கள்.

எல்லாம் சரிதான்….! குழந்தைகளைப் பெற்றுக் கொள் கிறோமே தவிர, இந்தக் குழந்தைகள் ஏன் எதற்கு என்று நாம் எப்போதாவது யோசித்தது உண்டா?

பொதுவாக குழந்தைப் பேற்றை விரும்புபவர்கள் அதற்குச் சொல்லும் காரணங்கள்-

  • கொஞ்சி மகிழ்வதற்கு
  • வம்சம் தழைப்பதற்கு
  • குடும்பப் பெருமையைக் கட்டிக் காப்பதற்கு
  • சொத்துக்களை அனுபவிப்பதற்கு
  • மலடி எனும் அவப்பெயர் வராமல் இருப்பதற்கு
  • வயதான காலத்தில் உதவுவதற்கு… இப்படிப் பல காரணங்கள்.

ஆனால் ஓர் இறைநம்பிக்கையாளனின் பார்வையில் குழந்தைகள் பொழுதுபோக்குப் பொருள்கள் அல்ல. தன் முது மைக் காலத்தில் குழந்தைகள் துணையிருப்பார்கள் என்பதற் காகவோ, தன் குலப்பெருமையை, குடும்பப் பெருமையைத் தனக்குப் பின்னால் பிள்ளைகள் நிலைநாட்டுவார்கள் என் பதற்காகவோ அவன் குழந்தைகளை வளர்ப்பதில்லை.

உண்மையில் குழந்தை ஓர் அடைக்கலப் பொருளாகவே நம்பிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த அடைக்கலப் பொருளை இறைவனின் விருப்பத்திற்கேற் பவே நம்பிக்கையாளன் வளர்க்க வேண்டும்.

இறைவன் அருளிய மார்க்கத்தின் அறங்காவலனாகவே ஒரு நம்பிக்கையாளன் திகழ்கிறான். வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இந்த மார்க்கம் செழித்து மேலோங்க வேண்டும் என்பதற்காகவே தன் இறுதி மூச்சு வரை உழைக்கிறான். இந்த இறைப்பணி தனக்குப் பிறகும் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும் என்றே அவன் விரும்புகிறான். அதற்காகவே தனக் கொரு வாரிசு வேண்டும் என்றும் ஆசைப்படுகிறான். இறைத் தூதர் ஜகரிய்யா (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனையை – அதில் பொதிந்திருக்கும் உணர்ச்சி அலைகளைப் பாருங்கள்.

அவர் (ஜகரிய்யா) தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்தார். “இறைவா! என்னுடைய எலும்புகள் உறு தியை இழந்துவிட்டன. தலையோ நரைத்துவிட்டது. என் இறைவனே, நான் கேட்டதை நீ எப்பொழுதும் நிராகரித்ததே இல்லை. எனக்குப் பின்பு என் உறவினர்களைப் பற்றி நான் அஞ்சுகிறேன். நான் செய்யும் இந்த இறைப்பணியை எனக்குப் பின்பும் அவர்கள் தொடர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இப்பொறுப்பை மேற்கொள்ளும் அளவுக்கு அவர்களில் யாரும் தகுதியுடையவராகவும் இல்லை. எனக்கோ குழந்தைப் பேறு இல்லை. என் மனைவி மலடாக இருக்கிறாள். எனவே, நீ என் மீது கருணை கொண்டு, எனக் கொரு வாரிசை அருள்வாயாக! அந்தக் குழந்தை என்னுடைய உண்மையான வாரிசாகத் திகழ்ந்து, யாகூபுடைய குடும்பத்தின ரின் பண்புகளுக்கும் வாரிசாக இருக்க வேண்டும். மேலும் அந்தக் குழந்தையை நற்குணங்கள் நிறைந்த சீலராகத் திகழச் செய்.” (குர்ஆன் 19@2-6)

குழந்தை பற்றிய ஓர் இறைநம்பிக்கையாளனின் கண் ணோட்டம் இதுவேயாகும். இறைத்தூதர் ஜகரிய்யாவின் பிரார்த்தனைக்கு இறைவன் விடையளித்தான்.

“ஜகரிய்யாவே! உனக்கு ஒரு மகனை அருளப் போகிறேன். அவருடைய பெயர் ‘யஹ்யா’ என்பதாகும். இப்பெயர் கொண்ட ஒருவர் இதற்கு முன் இருந்ததே இல்லை.”

(குர்ஆன் 19@7)

இறைவனின் கட்டளைப்படி யஹ்யா பிறந்தார். அவர் எந்த நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டார் என்பதை குர்ஆன் இரத்தினச் சுருக்கமாகக் கூறுகிறது @

“யஹ்யாவே…! இந்த வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்!” (குர்ஆன் 19@12)

அதாவது, இறைவேதத்தின் அறிவை அவர் நன்கு பெற வேண்டும். அந்தப் போதனைகளைத் தாமும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும். அதன் மூலம் இம் மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற வேண்டும்..

இந்த அடிப்படையில் நம்பிக்கையாளர்கள் ஒவ்வொரு வரும் தங்களின் குழந்தைகளுக்கு மார்க்கப் பயிற்சி அளித்து, இறைவழியில் வளர்ப்பார்களேயானால், இறையரசு விண் ணில் மட்டுமல்ல, மண்ணிலும் மலர்ந்து விடும்…!

Related Articles

Add Comment