“இரண்டு கடவுள்கள் இருந்தால் என்ன தப்பு?”

Category: Articles 76 0

கல்லூரி மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

அந்த மாணவர் எழுத்தார்வம் நிரம்பியவர். ஒரு நோட்டுப் புத்தகம் நிறைய கவிதைகளை எழுதிக் குவித்திருந்தார். பள்ளி – கல்லூரிகளுக்கு இடையிலான கட்டுரைப் போட்டிகள் பலவற்றில் முதல் பரிசுகள் பெற்றிருந்தார். எல்லாவற்றையும் என்னிடம் காட்டினார். இதழியல் துறையில் சேர்ந்து பணி யாற்றுவதுதான் தம் குறிக்கோள் என்றார்.

பேச்சுவாக்கில் அவர் கேட்டார் :

“பத்திரிகையாளன் ஆவதுதான் என் இலட்சியம். ஆகவே எல்லாச் செய்திகளையும் ஓரளவாவது அறிந்திருக்க வேண் டும் என்கிற ஆர்வம் எனக்கு உண்டு. அந்த வகையில் இஸ்லாம் குறித்தும் நான் கொஞ்சம் படித்துள்ளேன். இஸ்லாத்தில் ஓரிறைக் கொள்கை பெரிதும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இறைவன் ஒருவனாகத்தான் இருக்க வேண்டுமா? இரண்டு கடவுள்கள் இருந்தால் என்ன தப்பு…?”

அதிரடியாய் வினவினார் நண்பர்.

நான் அமைதியாகச் சொன்னேன் :

“இதழியல் துறையில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். இறையருளால் ஒரு பெரிய பத்திரிகை நிறுவனத்தில் உங்களுக்கு வேலை கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பத்திரிகைக்கு சம அதிகாரமும் சம உரி மையும் உள்ள இரண்டு பேர் ஆசிரியர்களாக இருந்தால் நிலைமை என்ன ஆகும்?”

நண்பர் பதறினார்@ “அய்யய்யோ…! எந்த வேலையும் ஒழுங்காக நடக்காதே! நான் தரும் செய்திகளை ஒருவர் வெளியிடலாம் என்பார்; இன்னொருவர் கூடாது என்பார்…! இவர்களின் தகராறுகளைத் தீர்ப்பதே பெரும்பாடு ஆகி விடுமே!”

“சரி; அப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் எந்த ஆசிரியரின் கட்டளைக்கு அடிபணிவீர்கள்?”

photo

“சிரமம்தான்! இவருடைய பேச்சைக் கேட்டால் அவருக் குக் கோபம் வந்துவிடும்; அவருக்கு அடிபணிந்தால் இவரு டைய வெறுப்புக்கு ஆளாக நேரும்!”

“தொடர்ந்து அதே நிலையில் அந்த நிறுவனம் வெற்றி கரமாக இயங்க முடியுமா?”

 

“நிச்சயம் முடியாது. அதிகாரப் போட்டியும் குழப்பங் களும் பெருகி, நாளடைவில் நிறுவனத்தையே இழுத்து மூட வேண்டிய நிலை தோன்றிவிடும்”

“சாதாரண பத்திரிகை நிறுவனத்துக்கே இந்தக் கதி என்றால் இந்த மாபெரும் பேரண்டத்திற்கு இரண்டு கடவுள்கள் இருந் தால் நிலைமை என்ன ஆகும்?”

நண்பர் சடாரென நிமிர்ந்து உட்கார்ந்து என்னைப் பார்த் தார். பிறகு யோசனையுடன் கேட்டார்@ “என்ன ஆகும்?”

“வானம் – பூமியின் ஒழுங்கமைப்பே சிதறி சின்னாபின்ன மாகிவிடும். ஒவ்வொரு கடவுளரும் தன்னுடைய படைப்பு களைத் தனியே அழைத்துக் கொண்டு அணி சேர்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஒருவருக்கொருவர் மேலோங்க முயல்வார்கள். ‘மழை பொழியட்டும்’ என ஒரு கடவுள் கட் டளையிடுவார்; இன்னொரு கடவுள் உடனே அதனைத் தடுத்து நிறுத்துவார். இந்நிலையில் பூமியில் மனிதர்கள் வாழ் வது ஒருபுறம் இருக்கட்டும்; புற்பூண்டுகள் கூட முளைக்காது. அதற்குப் பிறகு பூமி பூமியாக இருக்குமா? கொஞ்சம் யோசித் துப் பாருங்கள்.”

“ஆமாம் சார். நீங்கள் சொல்வது சரிதான். இரண்டு கடவுள்கள் இருந்தால் என்ன தப்பு என்று சாதாரணமாக கேட்டு விட்டேன். அதன் அபாயத்தை நன்கு புரிய வைத்துவிட்டீர்கள். மனிதர்களுக்கும் சரி, இந்தப் பிரபஞ்சத்திற்கும் சரி ஒரே இறைவன் இருப்பதுதான் பொருத்தமானது!”

“குர்ஆனும் அதைத்தான் சொல்கிறது நண்பரே!”

“அப்படியா…! அந்தக் குர்ஆன் வசனங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன், ப்ளீஸ்”

  • இரண்டு கடவுளரை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். இறைவன் ஒருவன்தான். (குர்ஆன் 16@51)
  • மூன்று கடவுள் எனச் சொல்லாதீர்கள். அப்படிச் சொல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். இறைவன் ஒரே இறைவன்தான் (குர்ஆன் 4@171)
  • வானத்திலும் பூமியிலும் இறைவன் ஒருவனைத் தவிர மற்ற கடவுள்களும் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுங் கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும். (குர்ஆன் 21@ 22-23)
  • இறைவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும் தன் படைப்புகளை அழைத்துக் கொண்டு தனியே சென்றிருப்பர். மேலும் ஒருவர் மற்றவரை விட மேலோங்க முயன்று கொண் டிருப்பர். இவர்கள் புனைந்துரைக்கும் தன்மைகளை விட்டு இறைவன் மிகத் தூய்மையாளனாக இருக்கின்றான்.

(குர்ஆன் 23@ 91)

“ஆஹா…! என்ன அருமையான – அறிவுப்பூர்வமான வச னங்கள்! நிச்சயமாக இறைவன் ஒருவனே என்று உங்களுடன் சேர்ந்து நானும் சாட்சி சொல்கிறேன்!”

“உங்களுக்கு உண்மையைப் புரிய வைக்க இறைவன் எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்தான். அதற்கு அந்த ஏக இறை வனுக்கே நன்றி செலுத்துகிறேன்!”

Related Articles

Add Comment