இதுதான் இஸ்லாம்

Category: Books 41 0

ithu Read eBook Online
‘இதுதான் இஸ்லாம்’ நூலின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு – அதாவது சற்றொப்ப 75 ஆண்டுகள் உருண்டோடி விட்டதை அறியலாம்.

இளம் தலைமுறையினருக்கு இஸ்லாம், இறைநம்பிக்கை (ஈமான்), கீழ்ப்படிதல், வழிபாடுகள், இறைத்தூது, மறுமை, தீன், ஷரீஅத் ஆகிய செய்திகளை எளிய முறையில் எடுத்துரைக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் 1935-ஆம் ஆண்டு இந்த நூலை எழுதினார். உருது மொழியில் எழுதப்பட்ட அந்த நூலின் தலைப்பு: ‘ரிஸாலே தீனியாத்.’

இந்நூலின் முதல் தமிழாக்கம் 1952-இல் ‘இஸ்லாம் மத ஞான விளக்கம்’ எனும் தலைப்பில் வெளியானது.

பிறகு ஏறத்தாழ 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிதாக இனிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் அவர்களின் அடிக்குறிப்புகளுடன் 1970-இல் வெளியிடப்பட்டது.

1970 முதல் 2007 வரை பழைய வடிவிலேயே பனிரெண்டு பதிப்புகள் வெளியாகின..!

இப்பொழுது நூலின் அளவு, வடிவம், உள்ளடக்கம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி, புதிய பொலிவுடன் புதிய புதிய பதிப்புக்கான பதிப்புரை அழகுடன் புதிய வடிவில் நூலை வெளியிட்டுள்ளோம்.

அல்ஹம்துலில்லாஹ்..!

இன்றைய பதின்பருவ (டீன்-ஏஜ்) இளைஞர்கள் இந்த நூலைப் படிப்பார்களேயானால், முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட நூல் இது என்று சத்தியம் செய்து

சொன்னால்கூட நம்ப மாட்டார்கள். காலந்தோறும் தமிழ் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதுபோல, இந்த நூலின் மொழிநடையும் புதுப்பிக்கப்பட்டு அழகுபட மிளிர்கிறது..!

நீங்கள் இந்த நூலின் கருத்துகளைச் சிந்தையில் பதித்து செயல் வடிவம் தந்தால், உங்கள் வாழ்க்கையிலும் புதுமை மலரும், அழகு மிளிரும்.

Related Articles

Add Comment